Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் திறப்புவிழா.. - டிசம்பர் 7 முதல் 15 வரை!!

நோர்து-டேம் திறப்புவிழா.. - டிசம்பர் 7 முதல் 15 வரை!!

13 கார்த்திகை 2024 புதன் 12:39 | பார்வைகள் : 1919


நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழா எதிர்வரும்  டிசம்பர் 7 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான ஒருவாரம் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வழிபாடுகளுடன் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 7 ஆம் திகதி அன்று ஆரம்பநாள் நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு பிஷப்கள் வருகை தந்து வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் நோர்து-டேம் தேவாலயம் தீவிபத்துக்குள்ளாகியிருந்தது. ஐந்து ஆண்டுகளில் தேவாலயம் புனரமைக்கப்படும் என ஜனாதிபதி மக்ரோன் உறுதியளித்திருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட €600 மில்லியன் யூரோக்கள் செலவில் இந்த திருத்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்