அஜித் ரஜினி மீண்டும் நேருக்கு நேர் மோதலா?
13 கார்த்திகை 2024 புதன் 13:42 | பார்வைகள் : 8146
அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான இவர், இதற்கு முன்னர் த்ரிஷா இல்லேனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இதையடுத்து அஜித்துடன் முதன்முறையாக இணைந்துள்ள ஆதிக், ஒரு ஃபேன் பாய் சம்பவமாக குட் பேட் அக்லி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. குட் பேட் அக்லி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். மேலும் அன்று அஜித்தின் பிறந்தநாளும் வருவதால் குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமையும் என கூறப்படுகிறது.
இதனிடையே குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக தற்போது ரஜினிகாந்தின் கூலி படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. மே 1ம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறை அதுமட்டுமின்றி வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருவதால் அப்போது வெளியிட்டால் இப்படத்திற்கு நல்ல கலெக்ஷனும் வரும் என்பதை கருத்தில் கொண்டு அப்போது ரிலீஸ் செய்யும் ஐடியாவில் படக்குழு உள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் நேருக்கு நேர் மோதின. அதில் அஜித் வெற்றி பெற்றார்.
தற்போது 6 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ள கூலி vs குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸ் மோதலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan