மீண்டும் ஆட்டத்தை ஆரமிக்கும் கார்த்தி
 
                    13 கார்த்திகை 2024 புதன் 13:39 | பார்வைகள் : 4684
கார்த்தி நடித்த 'வா வாத்தியாரே’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் முடிவடைந்ததாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வா வாத்தியாரே’. இந்த படத்தில் கார்த்தி, மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தில் ஒரு ஜாலியான காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார்.
கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒரு ஜாலியான காமெடி படத்தை எதிர்பார்க்கலாம் என்று கார்த்தி ரசிகர்கள் இந்த டீசரை பார்த்தபின் நம்பிக்கையுடன் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan