Paristamil Navigation Paristamil advert login

லக்ஸம்பேர்க்கில் இருந்து வந்து Gare de l'Est நிலையத்தில் இறங்கிய ஒருவர் கைது!

லக்ஸம்பேர்க்கில் இருந்து வந்து Gare de l'Est நிலையத்தில் இறங்கிய ஒருவர் கைது!

13 கார்த்திகை 2024 புதன் 12:00 | பார்வைகள் : 3063


ஞாயிற்றுக்கிழமை மாலை லக்ஸம்பேர்கில் இருந்து பரிசில் உள்ள Gare de l'Est நிலையத்துக்கு தொடருந்தில் வந்திறங்கிய 26 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு ஐரோப்பா ரீதியிலான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்தவாரத்தில் லக்ஸம்பேர்க்கில் உள்ள பெண் ஒருவரது வீட்டில் ஆயுதமுனையில் கொள்ளையிட்டுக்கொண்டு - பிரான்சுக்குள் தப்பி ஓடிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவர் Nancy (Meurthe-et-Moselle) நகருக்கு வருகை தந்ததாகவும், அதன் பின்னர் அங்கிருந்து அடுத்த தொடருந்தில் Gare de l'Est (10 ஆம் வட்டாரம்) நிலையத்துக்கு வந்தடைய, அங்கு வைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதின் போது அவரிடம் இருந்து நகை, பணம் மற்றும் கஞ்சா போன்றவை மீட்கப்பட்டிருந்ததாகவும், 20 ஆம் வட்டார காவல்துறையினர் அவரை தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்