Rungis : முகத்தில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!
13 கார்த்திகை 2024 புதன் 09:38 | பார்வைகள் : 1655
வீடொன்றில் இருந்து, முகத்தில் காயப்பட்ட நிலையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. Rungis (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள வீடொன்றில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவர், நேற்று நவம்பர் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டார். சமையலறையில் அவர் இரத்தவெள்ளத்தில் கிடந்ததாகவும், தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்பெண்ணின் கணவர் வீடு திரும்பியபோது, மனைவில் சமையலறையில் இறந்து கிடந்ததாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற உள்ளது.