தொழில் மோசடி விவகாரம் - தோனியிடம் விளக்கம் கேட்ட நீதிமன்றம்

13 கார்த்திகை 2024 புதன் 08:38 | பார்வைகள் : 3313
தொழில் மோசடி விவகாரம் தொடர்பாக விளக்க அளிக்க வேண்டும் என மகேந்திர சிங் தோனிக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி Aarka Sports and Management Limited நிறுவனத்தின் இயக்குநர்கள் மிஹிர் திவாகர் மற்றும் சவுமியா விஷ்வாஸ் ஆகியோர், தோனியின் பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தோனி ராஞ்சியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
தோனி தனது புகார் மனுவில், 2021ஆம் ஆண்டில் திவாகர், விஷ்வாஸின் ஒப்பந்தத்தை ரத்து செய்த பின்னரும், அவர்கள் தனது பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமியை திறந்துள்ளனர். மேலும் இருவரும் ரூ.15 கோடி மோசடி செய்ததாகவும் தோனி அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் தோனி தொடர்ந்த வழக்கை எதிர்த்து திவாகர் மற்றும் விஷ்வாஸ் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பில் தோனி நேரில் வந்து தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என ஜார்க்கண்ட் நீதிமன்றம் விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.
மிஹிர் திவாகர், சவுமியா விஷ்வாஸ் இருவரும் தோனியின் முன்னாள் தொழில்முறை கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3