பிரான்ஸ்-இஸ்ரேல் உதைபந்தாட்டப்போட்டி... பாலஸ்தீன கொடிக்கு தடை!!
10 கார்த்திகை 2024 ஞாயிறு 17:54 | பார்வைகள் : 3122
நவம்பர் 14 ஆம் திகதி Stade de France மைதானத்தில் பிரான்ஸ்-இஸ்ரேல் அணிகள் மோதும் உதைபந்தாட்ட போட்டி இடம்பெற உள்ளது. இந்த போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றபோதும், பாலஸ்தீன கொடி கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது என காவல்துறை தலைமையதிகாரி Laurent Nuñez அறிவித்துள்ளார்.
காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 4,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர்.
நெதர்லாந்து தலைநகர் Amsterdam இல் இடம்பெற்ற போட்டியின் போது இஸ்ரேல் ஆதரவாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.