இன்ஸ்டாகிராமில் உள்ள “Mention in Status” அம்சம் WhatsApp-யிலும் அறிமுகம்!
10 கார்த்திகை 2024 ஞாயிறு 05:47 | பார்வைகள் : 9523
உலகின் மிகவும் பிரபலமான தகவல் பரிமாற்று செயலியான WhatsApp, தங்களது வாடிக்கையாளர்களுக்கான பயனர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இதற்காக மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் புதிய அப்டேட்டாக Instagram-இருந்து ஈர்க்கப்பட்ட "ஸ்டேட்டஸில் குறிப்பிடு" (Mention in Status) அம்சம் வாட்ஸ் அப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம், பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் குறிப்பிடும்போது குறிப்பிட்ட தொடர்புகளுக்கு நேரடியாக அறிவிப்பை அனுப்ப அனுமதிக்கும்.
நீங்கள் உங்கள் WhatsApp ஸ்டேட்டஸில் ஒருவரைக் குறிப்பிடும்போது, அவர்கள் Instagram அறிவிப்புகள் செயல்படுவது போல ஒரு அறிவிப்பைப் பெறுவார்கள்.
இது அதிக ஈடுபாடு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை செயல்படுத்தும்.
அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஸ்டேட்டஸில் குறிப்பிடு"(Mention in Status) என்ற புதிய அப்டேட்டில் கூடுதலாக, WhatsApp-ல் உங்கள் ஸ்டிக்கரை சேர்க்கவும் (Add Yours Sticker) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan