Paristamil Navigation Paristamil advert login

தண்டவாளத்தில் தவறி விழுந்தவரைக் காப்பாற்றிய இருவர் - தேடப்படுகின்றனர்!

தண்டவாளத்தில் தவறி விழுந்தவரைக் காப்பாற்றிய இருவர் - தேடப்படுகின்றனர்!

9 கார்த்திகை 2024 சனி 15:03 | பார்வைகள் : 3156


இரு வாரங்களுக்கு முன்னர், பரிசில் உள்ள தொடருந்து நிலையம் ஒன்றில் முதியவர் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

பரிசில் உள்ள La Motte-Picquet Grenelle நிலையத்தில் இச்சம்பவம் கிட்டத்தட்ட இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது. தண்டவாளத்தில் தவறி விழுந்த அவரை இரு நபர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இந்நிலையில், குறித்த முதியவரது உறவினரால் அவ்விருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குறித்த முதியவரது மகள் இது குறித்து தெரிவிக்கையில், “இந்த நடத்தையை நான் பாராட்டுகிறேன். இதனை எனது பிள்ளைகளுக்கு நன் நடத்தைக்கு உதாரணமாக காட்டுகிறேன். அவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன். அவர்களுக்கு நான் நேரில் சந்திக்க விரும்புகிறேன்!” என தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்