மாணவர் விசா திட்டத்தை ரத்து செய்த கனடா

9 கார்த்திகை 2024 சனி 12:58 | பார்வைகள் : 4117
கனடா திடீரென மாணவர் விசா திட்டம் ஒன்றை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா அரசு, மாணவர்கள் விரைவாக கல்வி விசா பெற உதவும், Student Direct Stream (SDS) என்னும் திட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 8ஆம் திகதியுடன் இந்த திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.
வழக்கமாக மாணவர்கள் கல்வி விசா பெற 2 முதல் மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், இந்த SDS திட்டம் மூலம், சில நிபந்தனைகளின் பேரில், 4 முதல் 6 வாரங்களுக்குள் விசா பெற்றுவிடலாம்.
வீடு தட்டுப்பாடு பிரச்சினை மற்றும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, கனடா அரசு சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், தற்போது Student Direct Stream திட்டத்தையும் திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.