ரொனால்டோவுக்கே தலைவலி கொடுத்த கனடா வீரர்! போராடி வென்ற அல் நஸர் சவுதி

9 கார்த்திகை 2024 சனி 08:50 | பார்வைகள் : 4956
புரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 1-0 என அல் ரியாத்தை வீழ்த்தியது.
அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் ரியாத் (Al Riyadh) அணிகளுக்கு இடையிலான போட்டி பிரின்ஸ் பைசல் பின் ஃபாட் மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கிக் செய்த பந்தை, அல் ரியாத் கோல் கீப்பர் Milan Borjan தடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 32வது நிமிடத்தில் கோல் போஸ்ட் நோக்கி Brozovic (அல் நஸர்) அடித்த பணத்தையும் எதிரணி கோல் கீப்பர் தடுத்து பிடித்தார்.
எனினும் அல் நஸரின் சாடியோ மானே (Sadio Mane) விரைந்து வந்து கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் அல் நஸர் வீரர்கள் கிக் செய்த பல On goal shotகளை, கோல் கீப்பர் Milan Borjan (அல் ரியாத்) அற்புதமாக செயல்பட்டு Save செய்தார்.
அவற்றில் 88வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கிக்கும் அடங்கும். அந்த ஷாட்டை தலிஸ்கா வலைக்குள் தள்ளினாலும் Offside என அறிவிக்கப்பட்டதால் அல் நஸருக்கு இரண்டாவது கோல் கிடைக்கவில்லை.
கூடுதலாக வழங்கப்பட்ட 5 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் அல் நஸர் அணி 1-0 என வெற்றி பெற்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3