மழை காரணமாக இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
8 கார்த்திகை 2024 வெள்ளி 14:41 | பார்வைகள் : 15623
பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு பிரான்சின் இரு தெற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது.
நவம்பர் 8, இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் Aude மற்றும் Hérault ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வேகமாக காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை காலை வரை அங்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்க்கும் எனவும், அதிகபட்சமாக 120 மி.மீ மழை பதிவாகும் எனவும், மணிக்கு 60 கி. மீ வேகம் வரை காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan