Paristamil Navigation Paristamil advert login

பிரபாஸ் லோகேஷ் கனகராஜ் புதிய கூட்டணி?

பிரபாஸ்  லோகேஷ் கனகராஜ் புதிய கூட்டணி?

8 கார்த்திகை 2024 வெள்ளி 13:28 | பார்வைகள் : 991


தமிழ் சினிமாவில் 'மாநகரம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' என தொடர்ச்சியாக ஐந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து சாதனை புரிந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்க 'கூலி' படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படத்தை அவர் இயக்குவார் எனத் தெரிகிறது. அதற்கடுத்து பிரபாஸ் நடிக்க உள்ள பான் இந்தியா படத்தை இயக்க உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

'கேஜிஎப் ' படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து பிரபாஸ் நடிக்க மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க 'சலார் 2' ஒரு படம்; அது 2026ல் வெளியாகும்.

அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க ஒரு படம், 'ஹனுமான்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஒரு படம் என அந்த மூன்று படங்கள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரபாஸை நேரில் சந்தித்து கதை சொல்லி லோகேஷ் ஏற்கனவே சம்மதம் வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்