Paristamil Navigation Paristamil advert login

விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா?

விஜய் அரசியலில்  வெற்றி பெறுவாரா?

7 கார்த்திகை 2024 வியாழன் 13:56 | பார்வைகள் : 3376


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி முதல் மாநில மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தி முடித்து விட்டார். அவரது மாநாடு வெற்றி பெற்றதாக ரஜினி உட்பட பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் ரஜினியின் அண்ணனான சத்திய நாராயணா அளித்துள்ள ஒரு பேட்டியில், அவரிடத்தில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''கமல்ஹாசனை போன்று விஜய்யும் அரசியலில் முயற்சி செய்கிறார். அது ஒன்றும் தப்பில்லை. ஆனால் விஜய்யால் தமிழக அரசியலில் பெரிதாக வெற்றி பெற முடியாது,'' என்று ஒரு கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதே சத்ய நாராயணா தனது தம்பியான ரஜினி அரசியல் கட்சி தொடங்க இருந்தபோது, 'அவர் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்' என்று கருத்து கூறியிருந்தார். ஆனால் ரஜினி அரசியல் கட்சியே தொடங்கவில்லை. அதேபோல் கமல்ஹாசனின் அண்ணனான நடிகர் சாருஹாசனோ, கமல் அரசியலுக்கு வருவதாக இருந்தபோது, ரஜினி அரசியலில் சாதிப்பார். ஆனால் என் தம்பி கமல்ஹாசன் பிராமணர் என்பதால் அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அப்போது கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்