Paristamil Navigation Paristamil advert login

நாடு முழுவதும் வீதிகளில் போக்குவரத்து நெரிசல்.. செம்மஞ்சள் எச்சரிக்கை!

நாடு முழுவதும் வீதிகளில் போக்குவரத்து நெரிசல்.. செம்மஞ்சள் எச்சரிக்கை!

7 கார்த்திகை 2024 வியாழன் 10:36 | பார்வைகள் : 9058


நவம்பர் 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் நாடு முழுவதும் உள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நவம்பர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை வரை இந்த போக்குவரத்து நெரிசல் உள்வரும் (retours) மற்றும் வெளிச்செல்லும் (départs) ஆகிய வீதிகளில் நெருக்கடி நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1, A31, A35, A13, A87, A63, A7, A50 ஆகிய வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களுக்கும் வீதி போக்குவரத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்