என்ன field இது? கோபத்தில் விக்கெட்டை எடுத்ததும் வெளியேறிய பவுலர்! 10 வீரர்களுடன் விளையாடிய அணி

7 கார்த்திகை 2024 வியாழன் 09:21 | பார்வைகள் : 5631
இங்கிலாந்து எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப் கோபத்தில் களத்தில் இருந்து வெளியேறிய வீடியோ வைரலாகியுள்ளது.
பார்படாஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்து அணி துடுப்பாடிக் கொண்டிருந்தபோது 4வது ஓவரை அல்ஸாரி ஜோசப் (Alzarri Joseph) வீச வந்தார்.
அப்போது அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் ஃபீல்டு செட் அப் அவருக்கு கோபத்தை வரவழைத்தது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், கோபத்தில் 148 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீச, ஜோர்டான் காக்ஸ் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அந்த ஓவர் முடிந்தவுடனேயே அல்ஸாரி ஜோசப் வேகமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 10 பேருடன் ஒரு ஓவர் விளையாடியது. சிறிய இடைவெளிக்கு பிறகு ஜோசப் களத்திற்கு திரும்பினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025