Paristamil Navigation Paristamil advert login

திருத்தப்பணிகளில் 13 ஆம் இலக்க மெற்றோ.. போக்குவரத்து தடை!

திருத்தப்பணிகளில் 13 ஆம் இலக்க மெற்றோ.. போக்குவரத்து தடை!

6 கார்த்திகை 2024 புதன் 17:25 | பார்வைகள் : 4877


13 ஆம் இலக்க மெற்றோ வரும் நாட்களில் திருத்தப்பணிகளுக்கு உள்ளாவதை அடுத்து, பல்வேறு நிலையங்களில் இந்த சேவை இயக்கப்படமாட்டாது என RATP அறிவித்துள்ளது.

இவ்வார சனிக்கிழமை நவம்பர் 9 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை 11 ஆம் திகதி வரை இந்த 13 ஆம் இலக்க மெற்றோ La Fourche தொடக்கம் Gabriel Péri நிலையம் வரையான இடைப்பட்ட எந்த நிலையத்திலும் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gabriel Péri
Mairie de Clichy
Porte de Clichy
Brochant
La Fourche

ஆகிய ஐந்து நிலையங்களிலும் இந்த மூன்று நாட்களும் சேவை இயக்கப்படமாட்டாது எனவும், இந்த நாட்களில் மாற்றீடாக பேருந்துகள் (பேருந்து இலக்கம் M13) இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்