RER A தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி.. இரு கால்களும் துண்டிக்கப்பட்ட சோகம்..!
6 கார்த்திகை 2024 புதன் 15:15 | பார்வைகள் : 15561
RER A தொடருந்தில் மோதுண்டு இருகால்களும் துண்டிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று நவம்பர் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் இச்சம்பவம் Nation தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றது. நடைமேடையில் நின்றிருந்த ஒருவர் விழுந்து தொடருந்துக்குள் சிக்குண்டார். இதில் தொடருந்து ,மோதி அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணி வரை Vincennes - Auber நிலையங்களிடையே போக்குவரத்து தடைப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan