கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் ஓவியா...

6 கார்த்திகை 2024 புதன் 14:45 | பார்வைகள் : 4226
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 'பிரண்ட்ஷிப்'என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் லாஸ்ஸியா, அர்ஜூன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில் தான் நடிக்கும் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் #Savior. உங்கள மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்...என்று கூறியுள்ளார்.
'சேவியர்' படத்தில் நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாவும், ஹர்பஜன் சிங் டாக்டர் வேடத்தில் நடிக்க உள்ளதும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது. இவர்களுடன் வி.டி.வி கணேஷ், ஜி.பி.முத்து, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்க உள் இப்படத்தை இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை seantoa studio- நிறுவனம் தயாரித்துள்ளது.மேலும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025