சாய் பல்லவி அடுத்த படத்தின் அறிவிப்பு..!
6 கார்த்திகை 2024 புதன் 12:26 | பார்வைகள் : 11513
சாய் பல்லவி, சீதை என்ற கேரக்டரில் நடிக்கும் ’ராமாயணம்’ திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீர்கான் நடித்த ’டங்கல்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி இயக்கி வரும் திரைப்படம் ’ராமாயணம்’. நமீதா மல்கோத்ரா ப்ரைம் போக்கஸ் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ராமன் கேரக்டரில் ரன்பீர் கபூர், சீதை கேரக்டரில் சாய் பல்லவி நடித்துவரும் இந்த படத்தில் 'கேஜிஎஃப்' நடிகர் யஷ் ராவணனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நமீதா மல்கோத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியபோது: "இந்தியாவில் அதிகமாக கொண்டாடப்பட்ட கதைக்கு உயிர் கொடுத்துள்ளோம். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த புனிதமான தேடலில் இறங்கினேன். பல கோடி மக்களின் இதயங்களை ஐயாயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் இந்த காவியத்தை திரைக்கு கொண்டு வர முயற்சித்தேன்.
எங்கள் குழுவினர் நமது வரலாற்றின் உண்மை, கலாச்சாரம், புனிதம் ஆகியவற்றை அற்புதமான விஷுவலாக மாற்றுவதில் அயராது உழைத்து வருகின்றனர். இதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2026 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் முதல் பாகமும் 2027 ஆம் ஆண்டில் இரண்டாம் பாகமும் வெளியாகும். உலகம் முழுவதும் நம்முடைய கலாச்சாரத்தை, வரலாற்றை காண செய்வது எனது கனவாக இருந்த நிலையில் அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது" என்று கூறியுள்ளார்.இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான், பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைக்க உள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan