Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

6 கார்த்திகை 2024 புதன் 11:32 | பார்வைகள் : 4699


இலங்கையில் இன்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்