WhatsApp இல் தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல் அறிமுகம்

4 கார்த்திகை 2024 திங்கள் 11:02 | பார்வைகள் : 5154
WhatsApp இல் தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல் அறிமுகம்
WhatsApp தொடர்ந்து தனிப்பயனாக்கப்பட்ட பயனர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய சேர்க்கையாக தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல்(Custom Chat Lists) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
தனிப்பயனாக்கப்பட்ட உரையாடல் பட்டியல்களுடன், நீங்கள் உங்கள் அரட்டைகளை "குடும்பம்", "வேலை" அல்லது "நண்பர்கள்" போன்ற வெவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தலாம்.
இது உங்கள் உரையாடல் பட்டியலை விரைவாக தொகுத்து வழங்குவதுடன், உங்களின் மிக முக்கியமான உரையாடல்களில் கவனம் செலுத்தவும் உங்களை அனுமதிக்கிறது.
WhatsApp ஐத் திறந்து உங்கள் அரட்டைகள் தாவலின் மேற்புறத்தில் உள்ள + குறியைத் தட்டவும்.
உங்கள் தேவைக்கேற்ப உரையாடல் பட்டியல்களை உருவாக்கி திருத்தி கொள்ளலாம்.
ஒரு முறை உருவாக்கப்பட்டால், இந்த பட்டியல்கள் filter bar தோன்றும், இதனால் வெவ்வேறு வகையான அரட்டைகளுக்கு இடையே மாறுவது எளிதாகும்.