Paristamil Navigation Paristamil advert login

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்..!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்..!

4 கார்த்திகை 2024 திங்கள் 10:28 | பார்வைகள் : 6251


இந்தி சினிமாவில் அன்பாக கிங் கான் என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆவார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. திரைப்படம் இதுவரை 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று ஷாருக்கான் அவரது 59-வது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்பொழுது நடைப்பெற்ற மீட் அண்ட் கிரீட் என்ற பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான் "நான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை நிறுத்திய பின் சுவாசம் சீராக இருப்பதை உணரமுடிகிறது" என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நேர் காணலில் ஷாருக்கான் தான் ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். உணவு , தண்ணீர் என எதுவும் உட்கொள்ளாமல், 30 கப் காபி மட்டும் குடித்துக்கொண்ட காலமும் இருந்தது என கூறியது குறிப்பிடத்தக்கது.தனது 59 வது பிறந்தநாளை முன்னிட்டு இதை கூறியது ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்