Val d'Oise : ட்ராம் மோதி ஆறு வயதுச் சிறுமி காயம்!!
2 கார்த்திகை 2024 சனி 15:57 | பார்வைகள் : 9033
ட்ராம் மோதியதில் ஆறு வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நவம்பர் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, Sarcelles (Val-d'Oise) நகரில் பிற்பகல் 4 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. avenue de la Division-Leclerc வீதியின் அருகே பயணித்த ட்ராம் ஒன்றுடன் ஆறு வயதுச் சிறுமி ஒருவர் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
அதை அடுத்து அவர் உடனைடியாக Necker-Enfants Malades மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் உயிருக்காபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ராம் பாதையை இரு சிறுமிகள் கடக்க முற்பட்டபோது, அங்கு வந்த ட்ராமில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan