புறக்கணித்த ஒமர் அப்துல்லா : அதிருப்தி வெளியிட்ட துணை நிலை கவர்னர் - துவங்கியது மோதல்:
1 கார்த்திகை 2024 வெள்ளி 05:11 | பார்வைகள் : 6153
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவான தின விழா நிகழ்வை முதல்வர் ஒமர் அப்துல்லா புறக்கணித்ததற்கு துணைநிலை கவர்னர் அதிருப்தி தெரிவித்தார். இதனால் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது.
இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசியமாநாடு கட்சி,காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது, முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்.
பதவியேற்றதுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். அத்தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலும் அளித்தார்.
துவங்கியது மோதல்
இந்த சூழ்நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதன் 5-ம் ஆண்டு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் என்ற முறையில் பங்கேற்க வேண்டும் என்பது மரபு. ஆனால் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த துணை நிலைகவர்னர் கூறியது, தற்போதுவரை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தான் அதனை கொண்டாடுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநிலமாக மாறினால் அந்த நாளையும் கொண்டாவோம்.
யூனியன் பிரதேச முதல்வராக பதவியேற்று கொண்டு, அதன் உருவான தினத்தை முதல்வர் ஒமர் அப்துல்லா புறக்கணித்தது. அரசியல் சாசனத்திற்கு எதிராக இரட்டை தன்மை பிரதிபலிப்பதாக உள்ளது என விமர்சித்து பேசினார்.
மாநில அந்தஸ்து கோரி அதற்கான முயற்சியை முன்னெடுத்து பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தி வரும் ஒமர் அப்துல்லா, யூனியன் பிரதேச தினவிழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வருவதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan