சமரி அதப்பத்து வலுவாக அடித்த பந்தை ஒற்றை கையால் விழுந்து பிடித்த வீராங்கனை!
31 ஐப்பசி 2024 வியாழன் 12:21 | பார்வைகள் : 12759
மகளிர் BBL தொடரில் இலங்கை வீராங்கனை சமரி அதப்பத்து அதிரடியாக 38 ஓட்டங்கள் விளாசினார்.
சிட்னியில் நடந்து வரும் ஹோபார்ட் ஹரிக்கேன் அணிக்கு எதிரான போட்டியில் சிட்னி தண்டர் அணி 5 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது.
ஹீதர் நைட் 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசினார். இலங்கையின் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 29 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
11வது ஓவரை ஸ்ட்ரானோ வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சமரி அடித்த ஷாட்டை ஸ்ட்ரானோ அபாரமாக ஒற்றைக் கையால் விழுந்து பிடித்தார். இதனால் அதப்பத்து மிரண்டு போய் வெளியேறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan