அணு ஆயுத ஏவுகணை பயிற்சியில் தீவிரமாகும் ரஷ்யா....

30 ஐப்பசி 2024 புதன் 09:22 | பார்வைகள் : 7150
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யா தனது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
இந்த பயிற்சியில் குண்டுகள், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் துல்லியமாக ஏவப்பட்டன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிரெம்ளினில் உள்ள அணுசக்தி மையத்தில் இருந்து இந்த பயிற்சியை கண்காணித்தார்.
இந்த பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு பேசிய புடின், "இன்று நாம் மூலோபாய தடுப்பு அலகுகளை பயிற்சி செய்கிறோம். இதில், அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும்., கடைசி முயற்சியாக மட்டுமே ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்" என்று அவர் கூறினார்.
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க தேவைப்படும்போது மட்டுமே அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்ற கோட்பாட்டை ரஷ்யாவின் இராணுவக் கொள்கை கொண்டுள்ளது.
"மும்முனை அணு ஆயுதம் (nuclear triad) நமது இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு ஒரு வலுவான உத்தரவாதம் என்றும் இந்த வலிமைகள்தான் உலக சக்திகளுடன் சமநிலையை பராமரிக்க நமக்கு உதவுகின்றன" என்றும் அவர் கூறினார்.
உலகளாவிய பதட்டங்கள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இன்றைய நேரத்தில், நவீன மூலோபாய தடுப்பு அலகுகளை எப்போதும் தயாராக வைத்திருப்பது அவசியம். அவற்றை தொடர்ந்து புதுப்பிப்பதும் முக்கியம் என்று அவர் கூறினார்.
ரஷ்யா தனது பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் அனைத்து பகுதிகளையும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று புடின் கூறினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025