சூர்யா 45 வது படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அதிரடி!
29 ஐப்பசி 2024 செவ்வாய் 14:55 | பார்வைகள் : 7979
சூர்யா நடித்துள்ள கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வரும் நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44 வது படத்திலும் நடித்து முடித்து விட்டார். அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தில் நடிக்கப் போகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற கங்குவா இசை வெளியீட்டு விழாவில் ஆர். ஜே. பாலாஜி பேசும்போது, ஒரு உதவி இயக்குனர் என்னை பார்த்து ஒரு சந்தேகம் கேட்டார். அதாவது சில முன்னணி இயக்குனர்களின் பெயரைச் சொல்லி, இவர்களோடு கதையை எல்லாம் ரிஜெக்ட் செய்துவிட்ட சூர்யா, உங்க கதையை எப்படி ஓகே செய்தார் என்று கேட்டார். அதற்கு, நான் சொன்ன ஸ்கிரிப்ட்டையும் என்னையும் அவர் முழுமையாக நம்பினார். அதனால் தான் என் இயக்கத்தில் அடுத்து நடிக்க போகிறார். மேலும் என்னுடைய எக்ஸ் பக்கத்தில், சூர்யா படம் குறித்து குறிப்பிட்டு, வாட் ஆர் யூ குக்கிங்? என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லிக் கொள்ளும் பதில், அடுத்த ஆண்டு பயங்கரமாக, செம மாஸாக சமைத்து தரப்படும். அதற்கு நாம் முழு கேரண்டி என்று கூறினார் ஆர்.ஜே.பாலாஜி.


























Bons Plans
Annuaire
Scan