பிரதமர் Michel Barnier இற்கு சத்திரசிகிச்சை!

28 ஐப்பசி 2024 திங்கள் 19:00 | பார்வைகள் : 5553
பிரதமர் Michel Barnier இற்கு இரு நாட்கள் முன்னதாக சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
கழுத்து தோள்பட்டையில் இந்த சத்திரசிகிச்சை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் வாசிப்பு கடந்தவாரம் முழுவதும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், இரு நாட்கள் இடைவெளியின் பின்னர் இன்று மீண்டும் அவை ஆரம்பமாகியுள்ளன. இந்த இடைவெளியை பயன்படுத்தி பிரதமர் சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் நலமடைந்துள்ளதாகவும், நாளை செவ்வாய்க்கிழமை, மறுநாள் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என அறிய முடிகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025