2023 ஆம் ஆண்டில் '701' அகதிகள் வெளியேற்றம்..!
28 ஐப்பசி 2024 திங்கள் 13:55 | பார்வைகள் : 7376
கடந்த 2023 ஆம் ஆண்டில் Calais மற்றும் Dunkerque மாவட்டங்களில் மட்டும் 701 அகதிகள் வெளியேற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்வதற்காக கடற்கரை எல்லைப் பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கியிருக்கின்றனர். அவர்களை பல்வேறு தடவைகள் வெளியேற்றி வேறு தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், Calais மாவட்டத்தில் மட்டும் 662 வெளியேற்றங்களும் Dunkerque மாவட்டத்தில் 39 வெளியேற்றங்களும் கடந்த வருடத்தில் இடம்பெற்றிருந்தன.
மொத்தமாக 18,827 அகதிகள் வெளியேற்றப்பட்டனர். இத்தகவலை l'association Human Rights Observers (HRO) நிறுவனம் வெளியிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan