கோல் மழை பொழிந்த பாயெர்ன் முனிச்! Bundesligaயில் விஸ்வரூப வெற்றி
28 ஐப்பசி 2024 திங்கள் 08:44 | பார்வைகள் : 4007
VfL Bochum அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் பாயெர்ன் முனிச் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Bundesliga கால்பந்து போட்டியில் Bayern Munich மற்றும் VfL Bochum அணிகள் மோதின.
ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மைக்கேல் ஓலிஸ் (Michael Olise) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 26வது நிமிடத்தில் பாயெர்ன் முனிச்சின் இளம் வீரர் முசியாலா (Musiala) தலையால் முட்டி கோல் அடித்தார்.
பின்னர் இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) மிரட்டலாக கோல் (57வது நிமிடம்) அடித்தார்.
இந்த கோலை VfL Bochum அணி சுதாரிப்பதற்குள் பாயெர்ன் அணி அடுத்த அதிர்ச்சியை 64வது நிமிடத்தில் கொடுத்தது.
65வது நிமிடத்தில் லெரோய் சனே (Leroy Sane) கிக் செய்த பந்து காற்றில் வளைந்து சென்று கோலாக மாறியது. அடுத்து கிங்ஸ்லி கோமான் (Kingsley Coman) 71வது நிமிடத்தில் துடிப்பாக செயல்பட்டு கோல் அடித்தார்.
இறுதிவரை VfL Bochum அணியால் கோல் அடிக்கக் முடியவில்லை. இதனால் பாயெர்ன் முனிச் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan