Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதி கைது

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதி கைது

27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:50 | பார்வைகள் : 3493


இலங்கையில் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக ஹந்தான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 32 வயதுடை ரஷ்ய பிரஜைகள் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்