கனடாவில் கோர சம்பவம்- 3 பேர் பலி

27 ஐப்பசி 2024 ஞாயிறு 08:57 | பார்வைகள் : 4506
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஹுன்ட்வில் பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மரணங்கள் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண பொலிஸாரும், விசேட விசாரணை பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணங்களுக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து, வீட்டிற்குள் ட்ரோன் கேமராக்களை அனுப்பி போலீசார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது மூன்று பேர் சலனமற்ற நிலையில் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
பின்னர் இந்த மூவரும் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த துப்பாக்கி சுட்டு சம்பத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.