Seine-Saint-Denis : காவல்துறையினர் மீது தாக்குதல் - துப்பாக்கிச்சூடு !
26 ஐப்பசி 2024 சனி 18:57 | பார்வைகள் : 7742
குழு மோதலில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்ய முற்பட்டபோது, காவல்துறைனரை அவர்கள் தாக்கியுள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு Saint-Ouen (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
குழு மோதலில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டனர். அதில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், திடீரென அங்கு ஒரு மகிழுந்து வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய சிலர், காவல்துறையினரை தாக்க முற்பட்டனர்.
அதை அடுத்து காவல்துறையினர் அவர்களையும் கைது செய்ய முற்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டனர். அதை அடுத்து காவல்துறையினர் தப்பிச் சென்ற மகிழுந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஒருசிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan