சபிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மரகதக்கல்... அதன் மதிப்பு என்ன தெரியுமா?

26 ஐப்பசி 2024 சனி 15:56 | பார்வைகள் : 5340
உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்படும் ஒரு கல்லுக்காக இரண்டு நாடுகள் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், அது சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுகிறது.
ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் அளவில் காணப்படும் அந்த அபூர்வ மரகதக்கல் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.
உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என கொலம்பியா நாட்டிலுள்ள ஒரு கல் அழைக்கப்பட்டாலும், பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்னுமிடத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மரகதக்கல்லும் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என்றுதான் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் வெட்டியெடுக்கப்பட்ட அந்த கல், ஜெனரல் என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்ட ஒருவரைச் சென்றடைய, அவர் அதை 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்தார்.
ஆனால், அதன் இன்றைய மதிப்பு ஒரு பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கல் பயணிக்கும் வழியெல்லாம் பேரழிவுகளையும் பண நஷ்டத்தையும் உருவாக்கியதால் அது சபிக்கப்பட்ட மரகதக்கல் என அழைக்கப்படுகிறது.
பல இடங்கள் சுற்றி அமெரிக்காவுக்குள் நுழைந்த அந்த மரகதக்கல்லை Ferrara என்பவரும் Kit Morrison என்பவரும் New Orleans என்னுமிடத்தில் பத்திரப்படுத்திவைக்க, கத்ரினா புயல் அந்த இடத்தை துவம்சம் செய்தது.
பின்னர் அது காணாமல் போனதாக கூறப்பட, கலிபோர்னியாவில் மர்மமான முறையில் மீண்டும் தோன்றியது.
இறுதியாக, லாஸ் ஏஞ்சல்சிலுள்ள ஷெரீஃப் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது அது.
இந்நிலையில், பிரேசில் நாடு அந்த மரகதக்கல் தங்கள் தேசிய சொத்து என்று கூறி, அதை அமெரிக்கா தங்களிடம் ஒப்படைக்க, சட்டப்படி நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.
அது தொடர்பில், விரைவில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று முடிவெடுக்க உள்ளது.
வழக்கு முடிவில் அந்த மரகதக்கல் அமெரிக்காவிலேயே இருந்துவிட்டாலும் சரி, பிரேசிலிடம் கொடுக்கப்பட்டாலும் சரி, பல பிரச்சினைகளை உருவாக்கி, வழக்குக்காக பெரிய அளவில் பணச் செலவை உருவாக்கி, சென்ற இடங்களிலெல்லாம் இயற்கை பேரழிவுகளையும் உருவாக்கியதால், அது சபிக்கப்பட்ட மரகதக்கல் என பெற்ற பெயர் மட்டும் நீடித்துவிடும் போலிருக்கிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1