உதயநிதி துணை முதல்வர் இன்றோ, நாளையோ அறிவிப்பு

20 புரட்டாசி 2024 வெள்ளி 01:38 | பார்வைகள் : 5490
அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக நாளைக்கே அறிவித்து விடுவர் என, அமைச்சர் அன்பரசன் நேற்று காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
தி.மு.க.,வின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி, தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி மாலை, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அருகே நடக்க உள்ளது.
இதற்கான பாதுகாப்பு, வாகன பார்க்கிங், பந்தல் அமைப்பது போன்ற முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு நடத்த, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பச்சையப்பன் கல்லுாரி அருகே கூட்டம் நடக்கும் இடத்திற்கு நேற்று வந்திருந்தார்.
விழா நடக்கும் இடத்தை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்ட பின் அளித்த பேட்டி:
தி.மு.க., பவள விழாவையொட்டி நடக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவ்வளவு பேரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காஞ்சியில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் 50,000 பேருக்கு மேல் பங்கேற்க உள்ளனர்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஒரு வாரத்திற்குள் அவர் துணை முதல்வராக்கப்படுவார். ஏன், இன்றோ, நாளையோ கூட அறிவிப்பு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025