Paristamil Navigation Paristamil advert login

27 நாடுகளில் புதிய வகை கொரோனா -  அதிர்ச்சித் தகவல்!

27 நாடுகளில் புதிய வகை கொரோனா -  அதிர்ச்சித் தகவல்!

19 புரட்டாசி 2024 வியாழன் 09:49 | பார்வைகள் : 5473


தற்போது புதிய வகை கொரோனாவான 'எக்ஸ்.இ.சி.' 27 நாடுகளில் பரவி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் இந்த வகை கொரோனா, ஏற்கெனவே வந்த ஒமைக்ரான் திரிபுகள் கே.எஸ்.1.1 மற்றும் கே.பி.3.3 ஆகியவை இணைந்த கலவையாக உள்ளது.

இந்நிலையில் இது விரைவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கொரோனா திரிபாக மாறலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த புதிய வகை கொரோனா ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டது.

அதன்பின்னர் இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் உள்பட பல நாடுகளில் பரவ தொடங்கியது. இது குளிர்காலத்தில் வேகமாக பரவலாம் எனவும், தடுப்பூசிகள் மூலம் இதை தடுக்க முடியும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுக்கல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் 500 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எக்ஸ்.இ.சி. வகை புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லண்டன் பல்கலைக்கழகத்தின் மரபியல் மைய இயக்குனர் பிரான்காயிஸ் பாலக்ஸ் கூறுகையில், 'எக்ஸ்.இ.சி. எனப்படும் புதிய வகை கொரோனா வேகமாக பரவும் திறனுடையது. ஆனால் இதை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்