ரஷ்யாவின் திட்டம் தொடர்பில் ஜெர்மனி வெளியிட்ட தகவல்
18 புரட்டாசி 2024 புதன் 08:49 | பார்வைகள் : 6325
ரஷ்யாவிடம் உக்ரைன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் என்றால், விளாடிமிர் புடினின் அடுத்து இலக்கு வைத்துள்ள நாடு இது தான் என ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு அடுத்து மால்டோவா மீது ரஷ்யா ஊடுருவும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Annalena Baerbock.
மால்டோவா நாட்டின் தலைநகரான சிசினாவில் முன்னெடுக்கப்பட்ட மாநாடு ஒன்றில் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்து வந்த நிலையிலேயே அவர் விளாவிமிர் புடினின் அடுத்த இலக்கு குறித்து அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், உக்ரைனை ஆதரிப்பதற்காக நாம் செய்யும் அனைத்தும் மால்டோவாவைப் பொறுத்தவரையில் அதன் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதை உறுதி செய்வது போன்றது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் Annalena Baerbock,
இங்குள்ள பல அமைச்சர்களின் ஒருமித்த கவலை என்ன என்றால், உக்ரைனை ரஷ்யா கைப்பற்றும் என்றால், அவர்களின் அடுத்த இலக்கு மால்டோவா என்பது தான் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மால்டோவா ஜனாதிபதி Maia Sandu தெரிவிக்கையில், உக்ரைன் போர் காரணமாக மால்டோவா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே நாம் கண்டனம் தெரிவித்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள Maia Sandu, இதனால் பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் போர் நீடிக்கும் வரையில் மால்டோவா பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஜனாதிபதி Maia Sandu தெரிவித்துள்ளார்.
மால்டோவாவில் நடந்த இந்த மாநாட்டில் பிரான்ஸ், நெதர்லாந்து, ருமேனியா, போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளை சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan