Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

■ மெற்றோ பயணக்கட்டணம் அதிகரிப்பு!

■ மெற்றோ பயணக்கட்டணம் அதிகரிப்பு!

18 புரட்டாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 10117


மெற்றோ பயணச்சிட்டைகளின் விலை வரும் 2025 ஆம் ஆண்டு அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2.15 யூரோக்களாக உள்ள பயணச்சிட்டை ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் 0.35 சதத்தினால் அதிகரித்து 2.50 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

passe Liberté + பயணச்சிட்டையின் விலை 1.73 யூரோக்களில் இருந்து 1.99 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்துடன் 10 பயணச்சிட்டைகள் கொண்ட புத்தகம் (carnet de 10 tickets) விற்பனையும் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையங்களுக்குச் செல்ல ‘ஒரே கட்டணம்’ எனும் முறையும் கொண்டுவரப்பட உள்ளது. Roissy அல்லது Orly  விமான நிலையங்களுக்கு நீங்கள் பேருந்தில் பயணிக்க அல்லது RER இல் பயணிக்க அல்லது 14 ஆம் இலக்க மெற்றோவில் பயணிக்க எதுவாகினும் 13 யூரோக்கள் கொண்ட பயணச்சிட்டையை பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது Roissy bus, l'Orly bus கட்டணங்கள் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்