வங்கி அட்டை மோசடி.. €30,000 யூரோக்களை இழந்த ஒருவர்.. அவதானம்..!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 21:00 | பார்வைகள் : 9721
வங்கி அட்டை ஒன்றை புதுப்பிக்க முயன்ற ஒருவர், €30,000 யூரோக்கள் பணத்தினை இழந்துள்ளார். இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழக்கவேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
Moivrons (Meurthe-et-Moselle) நகரில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவருக்கு கடந்தவாரம் குறுஞ்செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அவரது கடனட்டை காலாவதியானதாகவும், அதனை புதுப்பிக்க €0.75 சதம் போதுமானது எனவும், கீழுள்ள இணைப்பு மூலம் தொடர்புகொள்ளவும் எனவும் அந்த குறுஞ்செய்தி தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த இணைப்பில் சென்று கடனட்டை தொடர்பிலான விபரங்களை வழங்க, சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்கு வங்கி முகவர் போன்று ஒருவர் வருகை தந்து, புதிய வங்கி அட்டை ஒன்றை வழங்கிவிட்டு பழைய கடனட்டையை வாங்கிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவரது கடனட்டையில் இருந்து €30,000 யூரோக்கள் பணம் எடுக்கப்பட்டுள்ளதையும், தாம் மோசடியில் சிக்கியுள்ளதையும் தெரிந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக ஜொந்தாமினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்கி ஏமாறவேண்டாம் எனவும், விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025