டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்தவர்களின் “கடைசி வார்த்தைகள்
17 புரட்டாசி 2024 செவ்வாய் 10:46 | பார்வைகள் : 2045
டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்தவர்களின் “கடைசி வார்த்தைகள்” குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான பொது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் நோக்கமாக, இந்த விபத்து குறித்த விவரங்களை ஆராய்ந்து, இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.
இந்த விசாரணை 2 வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் நாள் விசாரணையின் போது அமெரிக்க கடலோர காவல்படை டைட்டன் நீர்மூழ்கியின் இறுதி கணங்களின் காட்சியை வெளியிட்டுள்ளது.
அந்த காட்சிகளில், 3 பிரிட்டிஷ் குடிமக்களை உள்ளடக்கிய பயணக்குழு, போலார் பிரின்ஸ் என்ற ஆதரவு கப்பலில் உள்ள ஊழியர்களுடன் தொடர்ந்து உரையாடியதை காட்டியுள்ளது.
இந்த உரையாடலில் ஆழம் மற்றும் எடை குறித்த கேள்விகளுக்கு பிறகு ஆதரவு கப்பலுடனான தொடர்பை டைட்டன் நீர்மூழ்கி கப்பல் இழந்தது.
இருப்பினும், ஆதரவு கப்பலான போலார் பிரின்ஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தது, அதற்கு கிடைத்த கடைசி பதிலாக “எல்லாம் நன்றாக உள்ளது” (All good here) என்பது தான்.
டைட்டன் நீர்மூழ்கி கப்பலுடனான தொடர்பு ஆழத்தில் செல்ல செல்ல குறைய தொடங்கியுள்ளது, இறுதியில் சோகமாக டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியுள்ளது.