சீனாவில் பெபின்கா சூறாவளி - நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
 
                    16 புரட்டாசி 2024 திங்கள் 07:18 | பார்வைகள் : 7381
கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி சுமார் 151 கி.மீ. வேகத்தில் இன்று கரையை கடக்கும் என கிழக்கு கரையோர பகுதிகளில் 254 மி.மீ. அளவிலான மழைப்பொழிவு பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan