Paristamil Navigation Paristamil advert login

புதிய சாட்டிலைட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய ஈரான்

புதிய சாட்டிலைட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய ஈரான்

16 புரட்டாசி 2024 திங்கள் 07:13 | பார்வைகள் : 3302


ஈரான் இரண்டாவது முறையாக புதிய சாட்டிலைட்டை வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1 [Chamran- என்று இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின் [orbital manoeuvre ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரான் சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தமுடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்