இனி ரூ.5 லட்சம் செலுத்தவும் யு.பி.ஐ., பயன்படுத்தலாம்; புதிய வரம்பு இன்று முதல் அமல்!

16 புரட்டாசி 2024 திங்கள் 06:18 | பார்வைகள் : 7656
யு.பி.ஐ., பயன்படுத்தி மூன்று வகை தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பு ₹5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மருத்துமனைகள், கல்வி நிறுவனங்கள்,
* ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு இன்று முதல் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம்.
முன்னதாக சராசரியாக நாளொன்றிற்கான அதிகபட்ச யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாகும். ஆனால் வங்கிகளுக்கு அவற்றின் சொந்த வரம்புகளை அமைக்க அதிகாரம் உள்ளது. மூலதனச் சந்தைகள், வசூல், காப்பீடு உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகள் தினசரி ரூ. 2 லட்சம் வரம்பைக் கொண்டுள்ளன.
தற்போது மூன்று வகை தேவைக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025