Paristamil Navigation Paristamil advert login

ஒய்வு குறித்து நான் இன்று வரையில் யோசிக்கவில்லை - ரவிசந்திரன் அஸ்வின்

ஒய்வு குறித்து நான் இன்று வரையில் யோசிக்கவில்லை - ரவிசந்திரன் அஸ்வின்

15 புரட்டாசி 2024 ஞாயிறு 14:04 | பார்வைகள் : 6784


இந்தியாவின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் தமிழகத்தை சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணியில் அறிமுகமானார்.

இதுவரையில் அவர் 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி பெருமையை பெறுகிறார்.

தற்போது அஸ்வின் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கவுள்ளார். 37 வயதாகுவதால் இவருடைய ஓய்வு குறித்த பேச்சு தற்போது எழுந்துள்ளது.  

அதற்கு பதிலளிக்கும் விதமாக, "ஓய்வு குறித்து தற்போதைக்கு என் மனதில் எந்த நினைப்பும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்."

"எதிர்காலத்தை கணக்கில் கொண்டது கிடையாது. வயதாகும்போது கூடுதல் முயற்சி, பயிற்சி தேவை. அந்த வகையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகமான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டு வருகிறேன்."

"எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன்," என்று தெரிவித்துள்ளார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்