Paristamil Navigation Paristamil advert login

விமர்சனத்தில் சிக்கிய விஜய்!

விமர்சனத்தில் சிக்கிய விஜய்!

15 புரட்டாசி 2024 ஞாயிறு 11:50 | பார்வைகள் : 8724


நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஓணம் பண்டிகைக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறிய நிலையில் ஒரு பக்கம் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் மற்ற பண்டிகைக்கு வாழ்த்து ஏன் கூறவில்லை என்ற விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

தளபதி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, தமிழர் பண்டிகையான தமிழ் புத்தாண்டு உள்ளிட்டவைகளுக்கு வாழ்த்து சொல்லாத விஜய் அண்டை மாநிலத்தில் கொண்டாடும் ஒரு பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் வயநாடு பாதிப்பிற்கு நிதி கொடுக்காத விஜய் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதா என்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத விஜய்க்கு ஒரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய்க்கு அவரது  ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்