மீண்டும் ஆரம்பித்த அணுமின் நிலையம்..!
9 புரட்டாசி 2024 திங்கள் 05:36 | பார்வைகள் : 3479
Flamanville (Normandy) நகரில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம், கடந்தவாரம் திடீரென பழுதடைந்து நின்றது. இந்நிலையில், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 வருடங்களாக குறித்த அனுமின் நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில், பிரெஞ்சு மின்சார சபை €13.2 பில்லியன் யூரோக்கள் செலவில் திருத்தப்பணிகள் இடம்பெற்று கடந்தவாரம் மீண்டும் சேவைகள் இயக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை தன்னிச்சையாகவே அது செயலிழந்து நின்றது.
அதையடுத்து மீண்டும் அனுமின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1,600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.