Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாக்கு சீட்டை படம் எடுத்தவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் வாக்கு சீட்டை படம் எடுத்தவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

8 புரட்டாசி 2024 ஞாயிறு 11:53 | பார்வைகள் : 2094


வாக்கு சீட்டை முகநூலில் பதிவிட்ட கட்சியொன்றின் உயர் பீட உறுப்பினர் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவரது கைத்தொலைபேசியும் பகுப்பாய்வுக்காக பொலிசாரால் பெறப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பானது கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையில் 5 ஆம் திகதி மாலை தனக்கு சொந்தமான முகப்புத்தகத்தில், பொது வேட்பாளரை ஆதரிக்கும் சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்ட வாக்கு சீட்டை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் என்பவற்றுக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய உதவித் தேர்தல் ஆணையாளரால் வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த நபரை அழைத்து விசாரணை நடத்தி வவுனியா பொலிசார், அவரது கைத்தொலைபேசியை பெற்று அதனை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்