ரஷ்யாவின் ராணுவ தளவாடங்கள் சேமிப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் தாக்குதல்
8 புரட்டாசி 2024 ஞாயிறு 07:31 | பார்வைகள் : 8120
ரஷ்யாவிலுள்ள Voronezh என்னுமிடத்தில், ஆயுதங்கள் சேமிப்பகம் ஒன்று உள்ளது. அதிகாலை 3.00 மணியளவில் உக்ரைன் அந்த சேமிப்பகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
kamikaze வகை ட்ரோன் மூலம் அந்த சேமிப்பகத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் அந்த சேமிப்பகம் தீப்பற்றியுள்ளது.
தீப்பற்றியதும், அங்கு சேமித்துவைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இரவு முழுவதும் அவை தொடர்ச்சியாக வெடித்துக்கொண்டே இருந்துள்ளன.
உக்ரைன் தாக்குதலால் அந்த சேமிப்பகம் வெடித்துச் சிதறத்துவங்கியதையடுத்து, ரஷ்யாவின் Ostrogozhsky மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள Soldatskoye என்னும் கிராமத்தில் வாழும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 50 மைல் தொலைவிலுள்ள வேறொரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள், தற்காலிக தங்கும் மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தால் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது இதுவரை தெரியவரவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan