125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் -சீனா பண்ணைகளில் கண்டுபிடிப்பு
8 புரட்டாசி 2024 ஞாயிறு 07:29 | பார்வைகள் : 1029
சீனாவின் விலங்குப் பண்ணைகளில் 125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய 39 வகை ஆபத்தான தொற்றுகளும் இருப்பதாக நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
நேச்சர் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே 36 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில் முயல்கள், குரங்குகள், நரிகள், ராக்கூன் நாய்கள் போன்ற தோலுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் புதிய வைரஸ்களுக்கான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் கினியா பன்றிகளிடத்தில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது